Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தங்கும்விடுதிகள் சிலவற்றில் வசிப்போர், ஓய்வு நாள்களில் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்

சிங்கப்பூரில் சில தங்கும்விடுதிகளில் வசிப்போர், தங்கள் ஓய்வு நாள்களில் இனிமேல் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லமுடியும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சில தங்கும்விடுதிகளில் வசிப்போர், தங்கள் ஓய்வு நாள்களில் இனிமேல் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லமுடியும்.

அதற்கான முன்னோடித் திட்டம், இம்மாதம் தொடங்கப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

திட்டம், கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட தங்கும்விடுதிகளுக்கு பொருந்தும்.

திட்டத்தின் வழி, குடியிருப்பாளர்கள் தங்கள் ஓய்வுநாளன்று நடமாட்டக் கட்டுப்பாடு இன்றி வெளியே சென்று சொந்த வேலைகளை முடித்துத் திரும்பலாம்.

மளிகைச் சாமான் வாங்குதல், சிம் அட்டைகளை வாங்குதல், தாய்நாட்டுக்குப் பணம் அனுப்புதல்-போன்றவை அவற்றுள் அடங்கும்,

ஊழியர்கள் SGWorkPass செயலி வழி, Dormitory Exit Pass எனும் அனுமதிக்கு விண்ணப்பித்துப் பெறவேண்டும்.

அதன் வழி, அவர்கள் வெளியே செல்லும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படும்.

ஓய்வு நாள்களில், கூட்ட நெரிசலைக் குறைக்க, குடியிருப்பாளர்கள் வெளியே செல்லும் நேரம் வேறுபடும் என்று அமைச்சு கூறியது.

தகுதிபெறும் அனைத்து தங்கும்விடுதி குடியிருப்பாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

  • குடியிருப்பாளர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
  • வெளியே செல்வதற்கு 2 வாரங்களுக்கு முன், கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.
  • தனிமைப்படுத்தும் உத்தரவில் அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இல்லை.
  • தங்கும்விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி.
  • குடியிருப்பாளர் TraceTogether செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் பதிவு செய்துள்ளார்.
  • Exit Pass அனுமதியில் தேர்ந்தெடுத்த நேரத்தில் போதுமான இடங்கள் உள்ளன.

முன்னோடித் திட்டத்தின் வழி, Exit Pass அனுமதிக்கான ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும் என்றும், திட்டத்தில் பங்கேற்கும் விடுதிகள் மெல்ல மெல்ல அதிகரிக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்