Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த, தங்கும்விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழக்கமான பரிசோதனையிலிருந்து இனி விலக்கு இல்லை

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிக் குடியிருப்பாளர்களில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு இனிமேல் வழக்கமான கிருமித்தொற்றுப் பரிசோதனைக்குச் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த, தங்கும்விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழக்கமான பரிசோதனையிலிருந்து இனி விலக்கு இல்லை

கோப்புப்படம்: AFP/Roslan Rahman

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிக் குடியிருப்பாளர்களில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு இனிமேல் வழக்கமான கிருமித்தொற்றுப் பரிசோதனைக்குச் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

கிருமித்தொற்று நேர்ந்த தேதியிலிருந்து 270 நாள்களைக் கடந்ததும், மீண்டும் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்குச் செல்லவேண்டுமெனச் சுகாதார அமைச்சு அறிவித்தது.

COVID-19 நோய் தொற்றியவர்களோடு நெருக்கமாக இருந்தது தெரியவந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியத்தைக் கண்டறியவும், கிருமி பரவாமல் தடுக்கவும் அது அவசியம் என்று அமைச்சு குறிப்பிட்டது.

புதிய நடைமுறை, வரும் 29-ஆம் தேதியிலிருந்து நடப்புக்குவரும்.

இதற்குமுன்னர், பொதுவாகக் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள், வழக்கமான பரிசோதனைக்குச் செல்லத் தேவையில்லை.

அவர்களுக்கு மறுதொற்று நேரும் ஆபத்துக் குறைவு என்று அதிகாரிகள், கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தனர்.

இருப்பினும், ஆக அண்மை அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், கிருமித்தொற்று நேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன ஊழியர்கள் பரிசீலனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

அப்போது கிடைத்த ஆதாரங்களின்படி, குணமடைந்த நபர்களிடம் கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்புச் சக்தி படிப்படியாகக் குறையும் சாத்தியம் இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்