Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியாவில் தோன்றிய உருமாற்றம் கண்ட புதிய வகை “double mutant” கிருமி, 46 பேரிடம் அடையாளம்

இந்தியாவில் தோன்றிய உருமாற்றம் கண்ட புதிய வகை “double mutant” கிருமி, 46 பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் தோன்றிய உருமாற்றம் கண்ட புதிய வகை “double mutant” கிருமி, 46 பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் சமூக அளவில் இதுவரை யாரிடமும் அந்தக் கிருமி அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

Westlite Woodlands தங்கும்விடுதியில் பதிவான அண்மைச் சம்பவங்களுக்கும் இந்தியாவில் பரவும் புதுவகைக் கிருமித்தொற்றுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் தோன்றிய உருமாற்றம் கண்ட புதுவகைக் கிருமியின் தொடர்பில், உள்ளூர் அளவில் மொத்தம் 8 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

பிரிட்டனில் தோன்றிய B117 கிருமி - 7 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய B1351 கிருமி - 1 கிருமித்தொற்றுச் சம்பவம்

B117 கிருமி தொற்றிய 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிருமிப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது.

B1351 கிருமி தொற்றிய நபர், கடல்துறையில் பணிபுரிந்ததாகவும், சிங்கப்பூரில் அணையும் மற்ற கப்பல்களில் இருந்து, அவருக்கு அந்தக் கிருமி தொற்றியிருக்கலாம் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடையே அடையாளம் காணப்பட்ட புதிய வகை கிருமி

பிரிட்டனில் தோன்றிய B117 கிருமி - 155 பேர்

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய B1351 கிருமி - 130 பேர்

பிரேசிலில் தோன்றிய உருமாற்றம் பெற்ற கிருமி ரகங்கள் (P1 B11281, P2 B11282, P3 B11283) - 6 பேர்

B1525 கிருமி - 5 பேர்

அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்