Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பன்முகத்தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சிங்கப்பூரில் சிறந்த நிர்வாகத்துக்கான அடையாளம்: துணைப் பிரதமர் ஹெங்

பன்முகத்தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சிங்கப்பூரில் சிறந்த நிர்வாகத்துக்கான அடிப்படைக் கூறுகளில் ஒன்று எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

பன்முகத்தன்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது சிங்கப்பூரில் சிறந்த நிர்வாகத்துக்கான அடிப்படைக் கூறுகளில் ஒன்று எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.

நிர்வாகம் குறித்த அனைத்துலக மாநாட்டில் பேசியபோது அவர் அதனைப் பகிர்ந்து கொண்டார்.

இன்றைய சமுதாயங்களில் இனம், சமயம், பாலினம், தலைமுறை, சமூக-பொருளியல் தகுதிநிலை, ஆர்வங்கள் ஆகியவற்றைக் கொண்டு மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

உலகம் முழுதும் சமுதாயங்கள் பன்முகமாகிவரும் வேளையில் மக்களின் அக்கறைகளும் தேவைகளும் மாறுகின்றன.

அடையாளவாரியாக மக்கள் செயல்படத் தொடங்கினால் பன்முகத்தன்மை பிரிவினைக்கு வழிவிடலாம் என்று திரு. ஹெங் எச்சரித்தார்.

அனைவருக்கும் பொதுவான அம்சங்களைக் கட்டிக்காப்பதன் வழி மக்களை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை சிங்கப்பூர் கையாள்வதாகத் துணைப் பிரதமர் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்