Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் துணைப்பிரதமர் ஹெங்

துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான திரு. ஹெங் சுவீ கியெட் நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் துணைப்பிரதமர் ஹெங்

(படம்: CNA/File)

துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான திரு. ஹெங் சுவீ கியெட் நான்காம் தலைமுறை அமைச்சர்களுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

சிங்கப்பூரை நீண்ட காலத்துக்கு வழிநடத்திச் செல்லக்கூடிய இளைய தலைவருக்கு வழிவிடுவதாகத் திரு. ஹெங் கூறியிருக்கிறார்.

திரு. ஹெங் தொடர்ந்து துணைப்பிரதமராகவும், பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றுவார்.

மக்கள் செயல் கட்சியின் முதல் உதவித் தலைமைச் செயலாளராகவும் அவர் நீடிப்பார்.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது, திரு ஹெங் நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவார்.

இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

திரு. ஹெங்கின் முடிவை மதித்து அதை ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

கோவிட்-19 சூழலில் திரு. ஹெங் ஆற்றிய மகத்தான பணிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் லீ சொன்னார்.

திரு. ஹெங் தம்முடனும் மற்ற மூத்த அமைச்சர்களுடனும் இணைந்து இளைய தலைவர்களை வழிநடத்த உதவுவார் என்று பிரதமர் லீ கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்