Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை மக்களுக்கு வழங்குவது அரசாங்கங்களின் கடமை : துணைப் பிரதமர் தியோ

மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடைய விரும்பும் மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதே அரசாங்கங்கள் செய்யவேண்டிய முக்கியப்பணி என்று துணைப் பிரதமர், தியோ சீ ஹியென் தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -

மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடைய விரும்பும் மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதே அரசாங்கங்கள் செய்யவேண்டிய முக்கியப்பணி என்று துணைப் பிரதமர், தியோ சீ ஹியென் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் - சீனாவுக்கும் இடையிலான தலைமைத்துவம் தொடர்பான 7வது கருத்தரங்கில் அவர் அதனைத் தெரிவித்தார்

மாறிவரும் வாழ்க்கைச் சூழல், மேம்பட்ட எதிர்பார்ப்பு, வேறுபட்ட தேவைகள்-ஆகியவற்றுக்கிடையே அந்தப் பணி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார் துணைப் பிரதமர் தியோ.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான தலைமைத்துவம் தொடர்பான கருத்தரங்கு சுமார் 10 ஆண்டுகளுக்குமுன் அறிமுகமானது.

இருநாட்டு அரசியல் தலைவர்களும், மூத்த அதிகாரிகளும் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் ஒரு தளமாக அது விளங்கிவருகிறது.

அதில் பேசிய திரு. தியோ, மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு இருநாடுகளும் புத்தாக்கத்தோடு யோசித்துப் புதிய கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டுமென்றார்.

எடுத்துக்காட்டாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையை அவர் சுட்டினார்.

சிங்கப்பூரர்களின் ஆயுள் அதிகரித்து அவர்களின் தேவைகள் மாறிவருகின்றன.

அதற்கு ஈடுகட்டும்வகையில், வசதிகள் மேம்படுத்தப்பட்டுக் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.

ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிக் குடிமக்கள், தங்கள் சொந்த ஆரோக்கியத்துக்கு இன்னும் அதிகமாகப் பொறுப்பேற்றுக் கொள்வது முக்கியம் என்றார் திரு. தியோ.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்