Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - இந்தோனேசிய உறவு மேலும் வலுப்படும்: துணைப் பிரதமர் தியோ

சிங்கப்பூர்-இந்தோனேசியத் தலைவர்களின் தனிப்பட்ட கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும், இந்தோனேசியாவிற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார் துணைப் பிரதமர் தியோ சீ ஹியென். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்-இந்தோனேசியத் தலைவர்களின் தனிப்பட்ட கூட்டம் இவ்வாண்டு அக்டோபர் 12ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை பாலியில் நடைபெறும் அனைத்துலகப் பண நிதிய - உலக வங்கிக் கூட்டத்துக்கு முன்னதாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் லீ சியென் லூங்கும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் அக்டோபர் 11ஆம் தேதி சந்திப்பார்கள் என நம்பப்படுகிறது.

இருநாட்டுக்கும் இடையே உல்லாசக் கப்பல் பயணங்கள் கூடுதலாக இடம்பெறுவதாகவும், பல கூட்டுத் திட்டங்கள் இடம்பெறுவதாகவும் திரு. தியோ குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், இரு நாடுகளுக்கிடையே உறவு மேலும் வலுப்படும் என நம்புவதாக அவர் கூறினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்