Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேநீர் குடிப்பதால் மூளைக்குப் பயன்: ஆய்வு

வழக்கமாகவே தேநீர் அருந்துபவரா நீங்கள்?

வாசிப்புநேரம் -

வழக்கமாகவே தேநீர் அருந்துபவரா நீங்கள்?

தேநீர் அருந்தாதவர்களைக் காட்டிலும் உங்கள் மூளையின் செயல்திறன் அதிகமாக இருக்கக்கூடும்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

60 வயதுற்கு மேற்பட்ட 36 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களுடைய மூளைகளை ஊடுருவிக் கருவி மூலம் படம் பிடித்தனர் ஆய்வாளர்கள்.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 முறையாவது 'green tea', 'oolong tea', 'black tea' அருந்துவோரின் மூளையிலுள்ள நரம்புகளுக்கு இடையிலான தொடர்பு மேம்பட்டு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வயதின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மூளையைப் பாதுகாக்க தேநீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்வது உதவலாம் என்பதை ஆய்வு காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்