Images
  • sugar drinks
    (படம்: Pixabay)

அன்றாடம் குடிக்கும் இனிப்புப் பானங்களில் எவ்வளவு இனிப்பு உள்ளது?

திட்டங்களில் ஒன்று, ஐந்து தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்க்கப்படும் இனிப்பு பானங்களை சிங்கப்பூரில் முற்றிலும் தடைசெய்வது.

சராசரி சிங்கப்பூர் ஆண்ணுக்குச் சுமார் 2200 கிலோ கலோரியும் பெண்ணுக்கு 1800 கிலோ கலோரியும் தினசரி தேவை.

அதன் அடிப்படையில், சராசரி சிங்கப்பூரர் தினந்தோறும் அதிகபட்சமாக 11 தேக்கரண்டி சர்க்கரை அளவு உண்ணலாம் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது.

20 கிலோ கலோரி தோராயமாக 5 கிராம் எடை கொண்ட சர்க்கரைக்குச் சமம். அது தோராயமாக 1 தேக்கரண்டி சர்க்கரைக்குச் சமம்.

இந்தக் கணக்கைக் கொண்டு நாம் அருந்தும் பானங்களில் எவ்வளவு இனிப்பு உள்ளது என்பதைக் கணக்கிடலாம்.


நன்றி: சுகாதார மேம்பாட்டு வாரியம்

கணக்கு செய்து பார்த்தால், அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்கலாம்.

தேநீர், காப்பி போன்ற பானங்களில் குறைந்த அளவு சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம். சோடா பானங்களைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற இது மிகவும் உதவியாக இருக்கும்.

Top