Images
  • accident
    படம்:  Facebook/Jacelyn Wong

4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 6 வாரச் சிறை

4 வயதுச் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓட்டுநர் ஒருவருக்கு 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 ஆண்டுகளுக்கு வாகனமோட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் சிறுமியுடன் இருந்த மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தியதற்காக 54 வயது சாய் மீ சுனுக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் புக்கிட் பாத்தோக் செண்ட்ரலில் விபத்து கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி நேரிட்டது.

அந்தச் சாலையில் மணிக்கு 50 கிலோமிட்டர் வேகக் கட்டுப்பாடு உள்ளது.  ஆனால் அவர் வாகனத்தை மணிக்கு 60 கிலோமிட்டர் வேகத்தில் செலுத்தினார்.

அப்போது பாலர்பள்ளி முடிந்து எலினர் டான் சி ஷுயன் பணிப்பெண்ணோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சாலையைக் கடந்துகொண்டிருந்த போது இருவரும் வாகனத்தால் மோதப்பட்டனர்.


Top