Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆளில்லா வானூர்திகளில் உணவு விநியோகம்

உணவு விநியோகத்தை ஆளில்லா வானூர்திகளின் உதவியுடன் மேற்கொள்ளும் புதிய திட்டம் அறிமுகம் காணவுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஆளில்லா வானூர்திகளில் உணவு விநியோகம்

படம்: Hanidah Amin

உணவு விநியோகத்தை ஆளில்லா வானூர்திகளின் உதவியுடன் மேற்கொள்ளும் புதிய திட்டம் அறிமுகம் காணவுள்ளது.

அதன் வழி மேலும் துரிதமாகவும், தொலைவான இடங்களுக்கும் உணவை விநியோகம் செய்யலாம்.

PandaFly என்றழைக்கப்படும் திட்டம், Foodpanda, ST Engineering ஆகிய இரு நிறுவனங்களின் பங்காளித்துவத்தில் உருவாகிவருகிறது.

PandaFly திட்டத்துக்கான சோதனை முயற்சி இன்று இடம்பெற்றது.

இன்னும் 3இலிருந்து 5 ஆண்டுகளுக்குள் அதனைச் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2 கிலோகிராம் எடைகொண்ட உணவை இந்த வானூர்தியால் தூக்கிச் சென்று விநியோகம் செய்ய முடியும்.

5 கிலோமீட்டர் தூரம் வரை வானூர்தியால் பறக்கமுடியும்.

ஒவ்வொரு விநியோகத்திலும் 3 கட்டங்கள் இருக்கும்.

முதலில் உணவு விநியோக ஓட்டுநர் உணவகத்திலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வார்.

பின்னர் அதனை ஆளில்லா வானூர்தியில் அவர் பொருத்தவேண்டும்.

அதன் பின், வானூர்தி பறந்து சென்று வாடிக்கையாளரிடம் உணவைச் சேர்த்துவிடும்.

வானூர்தி, பிறகு தனது நிறுத்தும் இடத்துக்கு வந்திறங்கும்.

அதன் பின்னரே அடுத்த விநியோகத்துக்கான பணி தொடங்கும்.

நடைமுறையைப் பாதுகாப்பாக மேற்கொள்ளவேண்டும். அதை உறுதிப்படுத்தத் தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்றைய சோதனை முயற்சியில் கடலில் இருந்த கப்பல் ஒன்றுக்கு 10 நிமிடங்களுக்குள் 3 "Ayam Penyet" பொட்டலங்களைக் கொண்டு சேர்த்தது இந்த PandaFly வானூர்தி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்