Images
  • Drones to inspect hdb (1)

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்க ஆளில்லா வானூர்திகள்....

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்க ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜூரொங் ஈஸ்ட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் அண்மையில் அதை நேரில் கண்டிருப்பர்.

ஏனெனில், ஜூலையில் அங்குள்ள 4 புளோக்குகளில் சிறிய அளவில் ஒரு வாரத்துக்கு ஆளில்லா வானூர்திகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.

கட்டடங்களிலுள்ள குறைபாடுகளைக் சோதிக்கக் கழகமும் நகர மன்றங்களும் நடத்தும் வழக்கமான சோதனைகளுக்கு உறுதுணையாக இந்தப் புதிய முயற்சி இருக்குமா என்று ஆராயப்படுவதாகக் கழகப் பேச்சாளர், சேனல் நியூஸ்ஏஷியாவிடம் கூறினார்.

ஊழியர்கள் அடைய சிரமமாக உள்ள இடங்களைக் கண்காணிப்பதற்கே ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

ஜூலை 26ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 6 அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

புளோக்கின் ஒரு பக்கத்தைச் சோதனையிட வானூர்திக்கு 10இலிருந்து 15 நிமிடம் பிடித்தது.






 

Top