Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருந்து அல்லது சிகிச்சையின் அனைத்துப் பக்கவிளைவுகளையும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை: லாம் பின் மின்

ஒரு மருந்து அல்லது சிகிச்சையின் அனைத்துப் பக்கவிளைவுகளையும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனச் சுகாதார மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மருந்து அல்லது சிகிச்சையின் அனைத்துப் பக்கவிளைவுகளையும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை: லாம் பின் மின்

(படம்: Pixabay/PhotoLizM)

ஒரு மருந்து அல்லது சிகிச்சையின் அனைத்துப் பக்கவிளைவுகளையும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனச் சுகாதார மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் கூறியுள்ளார்.

அண்மையில், டாக்டர் லிம் லியென் ஆர்ன், தமது நோயாளிக்கு ஊசி குத்தும் முன் அது பற்றிய விவரத்துடன் அனுமதி பெறாததன் தொடர்பில் அவருக்கு அதிகபட்சத் தொகையான 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய டாக்டர் லாம் இன்று (பிப்ரவரி 11) நாடாளுமன்றத்தில் அவ்வாறு கூறினார்.

டாக்டர் லிம் தனது நோயாளியிடம் பக்கவிளைவுகள் குறித்து எதுவுமே கூறாததுதான், அவர் செய்த தவறு என டாக்டர் லாம் குறிப்பிட்டார்.

ஆனால், நோயாளிகள் எதிர்நோக்கக்கூடிய அனைத்துப் பக்கவிளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை என அவர் தெளிவுபடுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்