Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப் பொருள் ஒழிப்புச் சோதனை - 15 வயது சிறுமி உள்பட 92 பேர் கைது

சிங்கப்பூர் முழுவதும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் 15 வயதுச் சிறுமி உட்பட சந்தேக நபர்கள் 92 பேர் பிடிபட்டனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முழுவதும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் 15 வயதுச் சிறுமி உட்பட சந்தேக நபர்கள் 92 பேர் பிடிபட்டனர்.

அங் மோ கியோ, பிடோக், ஜூரோங், பொங்கோல் ஆகிய வட்டாரங்களில் சுமார் ஒரு வாரம் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 129 கிராம் போதைமிகு அபின், 49 கிராம் ஐஸ், 2 கிராம் கஞ்சா, 30 எரிமின்-5 மாத்திரைகள், 17 எக்ஸ்டஸி மாத்திரைகள், 8 LSD வில்லைகள், 52 கிராம் புதுவகை போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு 15,000 வெள்ளிக்கும் அதிகம் என்று கணிக்கப்படுகிறது.

அங் மோ கியோ அவென்யூ 4இல் ஒரு வீட்டில் இருந்த 50 வயதுப் பெண், தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்து மூர்க்கமாக நடந்து கொண்டார். அவரைச் சமாளிக்கக் கூடுதல் ஆள்பலம் பயன்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை தொடர்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்