Images
  • cnb drug bust
    (படம்: CNB)

போதைப்பொருளுக்கு எதிரான 4 நாள் சோதனையில் 108 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சிங்கப்பூர் முழுவதும் மேற்கொண்ட 4 நாள் சோதனை நடவடிக்கையில் 108 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து இன்று வரை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிடோக், பூன் லே, புக்கிட் மேரா, ஜூரோங், பாசிர் ரிஸ், தம்பனீஸ், தோபாயோ, வாம்போ, உட்லண்ட்ஸ், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 2160 கிராம் போதைமிகு அபின், 44 கிராம் ஐஸ், 13 கிராம் கஞ்சா, 19 எரிமின்-5 மாத்திரைகள், 10 எக்ஸ்டஸி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுடன் 468 கிராம் புதுவகை போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை தொடர்கிறது. 

Top