Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடிச் சோதனையில் 2 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல், 7 பேர் கைது

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் 7 பேர் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
அதிரடிச் சோதனையில் 2 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல், 7 பேர் கைது

(படம்: Central Narcotics Bureau)

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் 7 பேர் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனை நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 2 கிலோகிராம் போதைமிகு அபின் உட்பட, சுமார் 179,000 வெள்ளி பெறுமானமுள்ள பலவகையான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான நபர்கள் 29 வயதுக்கும், 65 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள்.

ஹவலோக் ரோட்டுக்கு அருகில் உள்ள ஜாலான் குக்கோ, அங் மோ கியோ உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைமிகு அபின், கிட்டத்தட்ட 900 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தும் அளவு எனத் தெரிவிக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீதான புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்