Images
  • crime (2)

சிங்கப்பூரில் 73,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சிங்கப்பூரையும் மலேசியாவையும் சேர்ந்த இரு ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.

ஆடவர்களிடமிருந்து 73,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

46 வயது சிங்கப்பூரரும் 40 வயது மலேசியரும் செங்காங்கில் பிடிபட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூரர் காம்பஸ்வேல் டிரைவில் (Compassvale Drive) மலேசியச் சந்தேக நபர் ஓட்டிவந்த காரில் ஏறுவதை அதிகாரிகள் பார்த்தனர்.

ரிவர்வேல் டிரைவில் (Rivervale Drive) இறங்கிக்கொண்ட சிங்கப்பூரர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் அதிகாரிகள் அந்தக் காரைப் பின்தொடர்ந்து சென்று ரிவர்வேல் லேனில் மலேசிய ஆடவரைக் கைதுசெய்தனர்.  

Top