Images
  • drug offender
    (படம்: Central Narcotics Bureau)

போதைப்பொருள் சோதனை நடவடிக்கையில் 115 பேர் கைது

சிங்கப்பூரில் கடந்த 4 நாள்களாக நடத்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்குரிய 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதனைத் தெரிவித்தது. இம்மாதம் 10ஆம் தேதி காலை முதல் இன்று காலை வரை சோதனை நடத்தப்பட்டது.

அதில் சுமார் 1,275 கிராம் ஐஸ், 1037 கிராம் கஞ்சா, 85 கிராம் போதைமிகு அபின், 24 கிராம் கெட்டமைன், 269 எரிமின்-5 மாத்திரைகள், 17 கிராம் புதுவகை போதைப்பொருள், 158 எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றின் மதிப்பு சுமார் 164,000 வெள்ளி.

Balestier, பூன் லே, புவாங்கோக், புக்கிட் பாதோக்,, யூனோஸ், மார்சிலிங், செம்பவாங், வாம்போ, உட்லண்ட்ஸ், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் காவல்துறையினருடன் இணைந்து சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Top