Images
  • m ravi
    (படம்: Facebook/Ravi MRavi, Xabryna Kek)

போதைப் பொருள் கடத்தல்காரரின் மரண தண்டனையை மறுஆய்வு செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு


போதைப் பொருள் கடத்தல்காரருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உரிய காரணமின்றி மறுஆய்வு நடைமுறையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது தற்காப்புத் தரப்புக்கு நினைவூட்டியது.

கடத்துவதற்காக போதைமிகு அபின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 44 வயது சயத் சுஹேல் சயத் ஸின்னுக்கு (Syed Suhail Syed Zin) நீதிமன்றம் 2015 இல் மரண தண்டனை விதித்தது.

கடந்த மாதம் 18ஆம் தேதி அது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

சயத்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு, தற்காப்பு வழக்குரைஞர் M. ரவி கோரியிருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டது.

சயத்துக்கு வழக்கில் நீதி தவறாமல் தீர்ப்பளிக்கப்பட்டது என்றும், அதற்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது. 

Top