Images
  • drug (1)
    ( படம்:  CNB )

போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 44 வயது சிங்கப்பூரர்

நேற்றிரவு நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையில் 44 வயது சிங்கப்பூர் ஆடவர் சிக்கியுள்ளார்.

193,000 வெள்ளி மதிக்கத்தக்க போதைப்பொருட்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக இன்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

2.54 கிலோகிராம் போதைமிகு அபின், 1.5 கிலோகிராம் கஞ்சா முதலியவை கைப்பற்றப்பட்டன.

போதைமிகு அபினைக் கொண்ட பையோடு பீச் ரோடு வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய அந்த ஆடவர் பிடிப்பட்டார்.

பின்னர் ஓவன் ரோட்டில் இருந்த அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் மேலும் பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

உங்கள் கருத்து

Top