Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது

தஞ்சோங் ரூ (Tanjung Rhu) வட்டாரத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது

கோப்புப்படம்: Jeremy Long

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தஞ்சோங் ரூ (Tanjung Rhu) வட்டாரத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரும் போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கைதானோரில் இருவர் சிங்கப்பூரர்கள். அந்த ஆடவர்கள், 67 வயதும், 58 வயதும் உடையவர்கள்.

அவர்களுடன் மலேசியர்களான 30 வயது ஆடவரும், 26 வயது மாதும் கைதாயினர்.

கப்போங் அராங் ரோட்டில் அவர்களிடமிருந்து சுமார் 1.25 கிலோகிராம் போதைமிகு அபினும், 130 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 100,000 வெள்ளிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைமிகு அபினை 600 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்