Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் தொடர்பில் 94 சந்தேக நபர்கள் கைது

சிங்கப்பூர் முழுவதும் கடந்த 4 நாள்களாக நடந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய 94 போதைப்புழங்கிகள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் முழுவதும் கடந்த 4 நாள்களாக நடந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய 94 போதைப்புழங்கிகள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் சிங்கப்பூர்க் காவல்துறையும் இணைந்து அந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.

இம்மாதம் 4ஆம் தேதி காலையில் சோதனை நடவடிக்கை தொடங்கியது.

தீவின் பல பகுதிகளில் நடந்த சோதனை இன்று காலையுடன் முடிவடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சோதனையில் சுமார் 18 கிராம் போதைமிகு அபின், 314 கிராம் ஐஸ், 81 கிராம் கஞ்சா, 384 கிராம் கெட்டமைன், 498 'எக்ஸ்டஸி' மாத்திரைகள், 652  Erimin-5 மாத்திரைகள், 40 கிராம் புதுவகைப் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், ஜூரோங், பாசிர் ரிஸ், செஞ்ஜா, தியோங் பாரு, உட்லண்ட்ஸ், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்