Images
  • drugs sized
    படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

11 கிலோகிராமிற்கு அதிமான போதைமிகு அபின் பறிமுதல் - 10 சந்தேக நபர்கள் கைது

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 28 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 10 சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று தீவின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 9 ஆடவர்களும் ஒரு பெண்ணும் பிடிபட்டனர்.

அதில், பலவகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

கிட்டத்தட்ட 11,118 கிராம் போதைமிகு அபின், 30 Ecstasy மாத்திரைகள், ஒரு Erimin-5 மாத்திரை, சுமார் 101 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மதிப்பு 800,000 வெள்ளிக்கும் அதிகம் என்று நம்பப்படுகிறது.

சோதனைகளில் 18,400 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைமிகு அபினைக் கிட்டத்தட்ட 5,290 போதைப்புழங்கிகள் ஒரு வாரம் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.  

Top