Images
  • drugs sized
    படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு 

288,000 வெள்ளிக்கும் மேலான போதைப்பொருட்கள் பறிமுதல் - நால்வர் கைது

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடந்திய சோதனை நடவடிக்கையில் 288,000 வெள்ளிக்கும் மேலான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கிலோ கிராம் போதைமிகு அபின், 1 கிலோ கிராம் கஞ்சா, 870 கிராம் ஐஸ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

உபி அவென்யூ 2-இல் உள்ள கார்ப் பேட்டை அருகில் இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் போதைப்பொருளைக் கடத்துபவர் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருவர் அவரது கூட்டாளி.

கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூர் ஆடவரிடமிருந்து கைக்கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்வதாக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.


உங்கள் கருத்து

Top