Images
  • dsa
    (படம்:Ngau Kai Yan)

உயர்நிலைப் பள்ளி நேரடி மாணவர் சேர்க்கைக்கு, அடுத்த ஆண்டிலிருந்து இணையம் வழி விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூரின் உயர்நிலைப் பள்ளிகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு, அடுத்த ஆண்டிலிருந்து இணையம் வழி விண்ணப்பிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

மாணவர்கள் இனி தாங்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பள்ளியிலும், தனித்தனியே அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

நேரடி மாணவர் சேர்க்கை முறைக்கான இணைய வாசல் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சு கூறியது.

2004ஆம் ஆண்டிலிருந்து, நேரடி மாணவர் சேர்க்கை முறை நடப்பில் உள்ளது.

அதன்மூலம், தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு முன்னரே, கல்வி-சாராத திறன்களைக் கொண்டு, மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் சேர முடியும்.

புதிய இணையவாசல் அதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும்.

மாணவர்கள் அதனைப் பயன்படுத்த ஊக்குவிப்பது நோக்கம் என்று அமைச்சு கூறியது.

எத்தகைய குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், திறமையுள்ள மாணவர்கள் கூடுதலான எண்ணிக்கையில், நேரடி மாணவர் சேர்க்கை முறையைப் பயன்படுத்திக்கொள்வர் என்று கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Top