Images
  • du pont
    (படம்: Facebook/Chan Chun Sing)

விலங்கு ஊட்டச்சத்து, உணவு, பானத் துறைகளின் உலக விநியோக முறையில் சிங்கப்பூர் இடம்பெற வழிவகுக்கும் புதிய உற்பத்தி நிலையம்

DuPont ரசாயன நிறுவனம், அதன் புதிய உற்பத்தி நிலையத்தை சிங்கப்பூரில் அமைக்கவிருக்கிறது.

அதன் மூலம் அந்தத் துறைக்கு உயர்-திறன்கள் கொண்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு விலங்கு ஊட்டச்சத்து, உணவு, பானம் ஆகியவற்றுக்கான உலக விநியோக முறையில் சிங்கப்பூர் இடம்பெறுவதற்கு அது வழியமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆலையில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை DuPont ரசாயன நிறுவனம் வெளியிடவில்லை.

இருப்பினும் அந்த முதலீடு, சிங்கப்பூரின் ஆற்றல் மீதான நம்பிக்கையின் அடையாளம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

உயர்கல்வி நிலையங்கள், உள்ளூர்த் திறனாளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.

உலக அளவில் செய்யப்படும் முதலீடுகளை ஈர்க்க, உயர்கல்வி நிலையங்கள் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் திரு சான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் எரிசக்தி, ரசாயனத்துறையில் வாய்ப்புகளை வளர்க்கும் முயற்சிகளுக்கு இடையே DuPontஇன் புதிய ஆலை அமையவுள்ளது. 

Top