Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Dyson மின்சக்தி கார் திட்டம் முடக்கம், 20 சிங்கப்பூரர்களின் வேலைக்குப் பாதிப்பு

பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனமான Dyson, அதன் வாகனப் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த முடிவுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
Dyson மின்சக்தி கார் திட்டம் முடக்கம், 20 சிங்கப்பூரர்களின் வேலைக்குப் பாதிப்பு

(படம்: Dyson)

பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனமான Dyson, அதன் வாகனப் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த முடிவுசெய்துள்ளது.

மின்சக்தியில் இயங்கும் காருக்கான திட்டத்தை Dyson நிறுவனம் வடிவமைத்தது. ஆனால் அதை வாங்க எவரும் முன்வராததால் பிரிவின் செயல்பாடு நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் Dyson வாகனப் பிரிவில் 523 பேர் பணிபுரிகின்றனர்.
நிறுவனத்திலேயே அவர்களுக்கு வேறு பொறுப்புகளை அமைத்துக்கொடுக்க முயற்சி செய்துவருவதாக Dyson தெரிவித்துள்ளது.

2021இல் மின் சக்தியில் இயங்கும் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சிங்கப்பூரர்கள் 20 பேரின் வேலைகள் பாதிக்கப்படும். அவர்களுக்கு நிறுவனத்தில் வேறு பொறுப்புகளை வழங்க முயல்வதாக Dyson தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்