Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செல்வந்தர் ஜேம்ஸ் டைசன் தனது பிரதான இல்ல முகவரியை சிங்கப்பூரிலிருந்து மீண்டும் பிரிட்டனுக்கு மாற்றியுள்ளார்

பிரிட்டஷ் செல்வந்தர் ஜேம்ஸ் டைசன் (James Dyson) தனது பிரதான இல்ல முகவரியை மீண்டும் பிரிட்டனுக்கு மாற்றியுள்ளதாக, பிரிட்டனில் உள்ள அந்த நிறுவனத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

வாசிப்புநேரம் -
செல்வந்தர் ஜேம்ஸ் டைசன் தனது பிரதான இல்ல முகவரியை சிங்கப்பூரிலிருந்து மீண்டும் பிரிட்டனுக்கு மாற்றியுள்ளார்

(கோப்புப் படம்: AFP/Christophe Archambault)

பிரிட்டஷ் செல்வந்தர் ஜேம்ஸ் டைசன் (James Dyson) தனது பிரதான இல்ல முகவரியை மீண்டும் பிரிட்டனுக்கு மாற்றியுள்ளதாக, பிரிட்டனில் உள்ள அந்த நிறுவனத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்தார்.

Dyson நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் சிங்கப்பூரின் St James மின் நிலையத்துக்கு மாற்றப்படும் என்று, 2019ஆம் ஆண்டில் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாகி ஜிம் ரோவன் (Jim Rowan) CNA-விடம் கூறினார்.

திரு. டைசனின் இடமாற்றத்தால், சிங்கப்பூர் மீதான நிறுவனத்தின் கடப்பாடு மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு, "எதுவும் மாறவில்லை" என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூர், டைசனின் உலகளாவிய தலைமையகமாக உள்ளது, அது தொடர்ந்து இருக்கும் என்று கூறப்பட்டது.

நிறுவனத்தின் தலைமைத்துவக் குழு இங்கு தளம் கொண்டிருப்பதாகவும், நிறுவனத்தின் விற்பனை, பொறியியல், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் மையமாகும் என்றார் அவர்.

தொடர்ந்து சிங்கப்பூரில் முதலீடுகளை விரிவுபடுத்துவதாகவும், புதுப்பிப்புப் பணி முடிந்ததும் St James மின் நிலையத்துக்கு தலைமையகம் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்