Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு வரவிருக்கும் Dyson நிறுவனத்தின் நிர்வாகத் தலைமை அலுவலகம்

பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனமான Dyson, அதன் நிர்வாகத் தலைமை அலுவலகத்தை சிங்கப்பூருக்கு மாற்றவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கு வரவிருக்கும் Dyson நிறுவனத்தின் நிர்வாகத் தலைமை அலுவலகம்

படம்: Channel NewsAsia

பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிறுவனமான Dyson, அதன் நிர்வாகத் தலைமை அலுவலகத்தை சிங்கப்பூருக்கு மாற்றவிருக்கிறது.

பெரும்பாலான வாடிக்கையாளர்களும் உற்பத்தி செயல்பாடுகளும் ஆசியாவில் இருப்பது அதற்குக் காரணம் என Dyson நிறுவனம் கூறியது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதோ மற்ற வரி சார்ந்த விவகாரங்களோ அந்த மாற்றத்துக்குக் காரணம் அல்ல என்று அது சொன்னது.

அந்த நிறுவனம் அதன் மின்-காரைச் சந்தையில் அறிமுகம் செய்வதால் அதன் நிர்வாகத் தலைமை அலுவலகத்தை மாற்றும் பணிகள் துரிதமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதன் பொருள்களை ஆசியாவில் தயாரிப்பதால் அதன் புதிய மின் காரை சிங்கப்பூரில் தயாரிக்கவிருப்பதாக Dyson கூறியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்