Images
  • escooter
    (படம்:Singapore Police Force, Google Street View)

பிடோக்கில் மின் ஸ்கூட்டர் மோதியதில் கடும் காயமடைந்த மாது; ஓட்டுநரைத் தேடிவரும் காவல்துறை

பிடோக்கில் மின்ஸ்கூட்டர் மோதியதில் 45 வயது பெண் கடும் காயமடைந்து உடல்நிலை மோசமாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் ஸ்கூட்டரைச் செலுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரைக் காவல்துறை தேடிவருகிறது.

நீல நிற ஆடையில் இருக்கும் ஆடவர் கொண்ட நிழற்படத்தைக் காவல்துறை வெளியிட்டது.

முரட்டுத்தனமான செயலால் பிறருக்குக் காயம் ஏற்படுத்தியதாகச் சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை பிடோக் ரெசர்வோர் ரோட்டில் உள்ள புளோக் 151இல் மாலை 6 மணியளவில் சம்பவம் நடந்தது.

சம்பவத்தில் காயமடைந்த கோ லே யோங் மேம்பாலத்திலிருந்து இறங்கும்போது அவர்மீது மின்ஸ்கூட்டர் மோதியதாகக் கூறப்படுகிறது.

சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்றபோது கோ சுயநினைவோடு இருந்துள்ளார்.

எனினும் மருத்துவமனையில் அவரின் உடல்நிலை மோசமாகியிருக்கிறது.

கோவின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு நின்றுவிட்டதாகச் சொன்ன சகோதரர் அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகக் கூறினார். 

தற்போது கோ தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியம் என்றும் இன்னொரு குடும்பத்தினர் கூறியிருந்தார். 

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் காவல்துறையுடன் தொடர்புகொள்ளும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1800-255-0000 என்ற எண்ணை அழைக்கலாம்.

www,police,gov.sg/iwitness என்ற இணையத்தளத்திலும் தகவல்களைப் பதிவுசெய்யலாம்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.

உங்கள் கருத்து

Top