Images
  • e-scooter
    படம்: Channel 8 News/Mr Su

6 வயதுச் சிறுவன் மீது மோதிய மின்ஸ்கூட்டர் ஓட்டுநருக்குச் சிறை

பொங்கோல் பார்க்கில் 6 வயதுச் சிறுவன் மீது மோதிய மின்ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு 5 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுவனுக்கு முறிவுகள் ஏற்பட்டன. அவனது செவிப்புலனும் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.

கவனக்குறைவாகச் செயல்பட்டுக் காயம் ஏற்படுத்தியதாக 42 வயது நியோ வேய் சியா மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி மாலை ஆறரை மணிக்கு அப்பர் சிராங்கூன் ரோட்டில் உள்ள பொங்கோல் பார்க் இணைப்புப் பாதை அருகே அந்தச் சம்பவம் நடந்தது.

மின்ஸ்கூட்டரை வேகமாகச் செலுத்திய நியோ பாதையில் கவனம் செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 


Top