Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதிய சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்

முதிய சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்

வாசிப்புநேரம் -

முதிய சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த குற்றத்தை, மின் ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒப்புக்கொண்டார்.

நிலப் போக்குவரத்து ஆணைய விதிகளுக்கு உட்படாத தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்திய குற்றத்தையும்
22 வயது ஹங் கீ பூன் (Hung Kee Boon) எனும் அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஹங் 2019 செம்படம்பர் 23ஆம் தேதி பிடோக் நார்த் ஸ்டீரீட் 3-இல் மின் ஸ்கூட்டரை வேகமாகச் செலுத்தியுள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த 65 வயதுப் பெண் ஓங் பீ எங் (Ong Bee Eng) மீது ஹங் மோதினார்.

விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அந்த பெண் மருத்துவமனையில் மாண்டார்.

விதிமுறைகளுக்கு உட்படாத வாகனம் என்று தெரிந்தே ஆடவர் நடைபாதையில் வாகனத்தை செலுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

மலேசியரான ஹங்கிற்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்