Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நடைபாதையில் மின்ஸ்கூட்டர் தடை - பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு உதவ 7 மில்லியன் வெள்ளி மானியம்

மின்ஸ்கூட்டருக்குப் பதிலாக சைக்கிளையோ நிலப் போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்துள்ள நடமாட்டச் சாதனத்தையோ பயன்படுத்தும் உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு உதவ 7 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள Trade-in Grant எனும் மானியத்தைப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நடைபாதையில் மின்ஸ்கூட்டர் தடை - பாதிக்கப்பட்ட உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு உதவ 7 மில்லியன் வெள்ளி மானியம்

படம்: ElectroWolf, Electric Scooters Singapore‎/ Facebook

மின்ஸ்கூட்டருக்குப் பதிலாக சைக்கிளையோ நிலப் போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்துள்ள நடமாட்டச் சாதனத்தையோ பயன்படுத்தும் உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு உதவ 7 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள Trade-in Grant எனும் மானியத்தைப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்கீழ் ஓட்டுநர்களுக்கு 1,000 வெள்ளி வரையிலான மானியம் வழங்கப்படும் .

நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவு விநியோக ஓட்டுநர்கள் பலர் அண்மையில் தெரிவித்தனர்.

அதனையொட்டி அரசாங்கமும் கிராப், டிலிவரூ, ஃபூட்பாண்டா ஆகிய உணவு விநியோக நிறுவனங்களும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

மின்ஸ்கூட்டரை ஒப்படைத்து விட்டு, அங்கீகரிக்கப்பட்ட நடமாட்டச் சாதனத்தைப் பெற விரும்பும் ஓட்டுநர்களுக்கு உணவு விநியோக நிறுவனங்கள் கைகொடுக்கும்.

நிறுவனங்கள் கொடுக்கும் தொகைக்கு ஈடாக வெள்ளிக்கு வெள்ளி அரசாங்கம் மானியம் தரும்.

மானியத்துக்குத் தகுதி பெற நேற்றுவரை மின்ஸ்கூட்டரில் உணவு விநியோகித்தவராக இருக்கவேண்டும்.

திட்டம், ஆண்டிறுதி வரை நடப்பில் இருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்