Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி சரக்கு விமானச் சேவை நிலையத்தில் $30,000 மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்

சாங்கி சரக்கு விமானச் சேவை நிலையத்தில் 30,000 டாலர் மதிப்புள்ள மின் சிகரெட்டுகளும், அது தொடர்பான சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

வாசிப்புநேரம் -

சாங்கி சரக்கு விமானச் சேவை நிலையத்தில் 30,000 டாலர் மதிப்புள்ள மின் சிகரெட்டுகளும், அது தொடர்பான சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்குரிய பொட்டலங்களில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்பில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

சென்ற வாரம், சரக்கு விமானச் சேவை நிலையத்தில் 31 பொட்டலங்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது அவற்றில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், 27 மின் சிகரெட்டுகளும் அவை தொடர்பான 400 பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. அவை சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பொருள்களாகும்.

அந்தப் பொட்டலங்களுக்கு உரியவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை செய்தபோது கூடுதலான மின் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து இணையம் மூலம் மின் சிகரெட்டுகளை வாங்கிய சந்தேகத்திற்குரிய நபர்கள், சட்டத்திலிருந்து தப்பிக்க அவற்றை விளையாட்டுப் பொருட்கள் என்று தெரிவித்துள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்