Images
  • e-vaporiser (1)
    (படம்: HSA)

32 மின் நுகரும் சாதனங்கள், 635 மின் திரவக் கலன்கள் பறிமுதல்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள், 27 வயது சிங்கப்பூர் ஆடவரிடமிருந்து 32 மின் நுகரும் சாதனங்கள்(e-vaporiser), 635 மின் திரவக் கலன்கள் (liquid cartridges) ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

திரவ வடிவிலான நிக்கோடினைப் புகையாக மாற்றி உறிஞ்சுவதற்கு அந்தச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு வந்த அந்த ஆடவரின் காரிலிருந்து 6 மின் நுகரும் சாதனங்களும் 223 மின் திரவக் கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையமும் சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அது பற்றித் தெரிவிக்கப்பட்டது.

பிடிபட்ட சமயத்தில் போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

26 மின் நுகரும் சாதனங்களையும் 412 மின் திரவக் கலன்களையும் SingPost POPStation பெட்டகத்தில் சந்தேக நபர் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.  

Top