Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்மேற்கு வட்டாரத்தில் மின்னியல் கழிவுகளை மறுபயனீடு செய்யும் புதிய இயக்கம்

தென்மேற்கு வட்டாரத்தில், மின்னியல் கழிவுகளைக் கையாளும் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் தென்மேற்கு வட்டாரத்தில், மின்னியல் கழிவுகளைக் கையாளும் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

மின்னியல் கழிவுகளை மறுசுழற்சி செய்யக் கற்பிக்கும் முறைகள் மூலம் சமூகத்தில் ஆக்ககரமான மாற்றத்தை உருவாக்குவது அதன் நோக்கம்.

PC Dreams நிறுவனத்துடன் இணைந்து, தென் மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அதற்கான முன்னோடித் திட்டத்தை இன்று (ஜனவரி 13) தொடங்கியது.

சிங்கப்பூரில் ஓராண்டுக்கு 60,000 டன் மின்னியல் கழிவுகள் சேர்கின்றன; அவற்றில் 6 விழுக்காடு மட்டுமே மறுபயனீடு செய்யப்படுகின்றன.

2021ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் மின்னியல் கழிவு நிர்வாகம் கட்டாயமாக்கப்படும்.

மன்றம் அதனைக் கருத்தில்கொண்டு, Recycle Our E-waste @ South West எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

புக்கிட் கொம்பாக் Sunshine குடியிருப்பாளர் சங்கத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அது அறிமுகம்கண்டது.

மின்னியல் கழிவுகள் குறித்த கற்பித்தலின் மூலம் குடியிருப்பாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மின்னியல் கழிவுகளை மறுபயனீடு செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது, தங்களிடமிருக்கும் மின்னியல் கழிவுகளை வழங்குவதன் மூலம் நற்காரியங்களுக்கான அறநிதி திரட்ட உதவும்படி தூண்டுவது ஆகிய அம்சங்களில், இயக்கம் கவனம் செலுத்தும்.

தென் மேற்கு வட்டாரத்தில் மின்னியல் கழிவுகளைச் சேகரிக்கும் 6 நிலையங்கள் அமைக்கப்படும்.

அங்கு சேரும் பொருள்களின் மூலம் கிடைக்கும் நிதி, South West Eco Fund Plus எனும் அறநிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை தொடங்கிய நிகழ்ச்சியில்,தென் மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் (Low Yen Ling) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

இதுபோன்ற நடவடிக்கைகள் குடியிருப்பாளர்களிடையே மின்னியல் பொருள்களை மறுபயனீடு செய்யும் பழக்கத்தையும், அதேநேரத்தில் சமூகத்துக்கு நன்மை செய்யவும் தூண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்