Images
  • East Coast GRC
     (படம்: People's Action Party/Workers' Party)

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கக்கூடும்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் செயல் கட்சி அணியினரைத் துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) வழிநடத்துகிறார்.

அங்குத் திரு. லிம் சுவீ சே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் 4 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதியாக இருந்தது.

அப்போதும் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிட்டன.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே (Lim Swee Say), லீ யீ ஷியான்(Lee Yi Shyan), முகமது மாலிக்கி ஒஸ்மான்(Maliki Osman), ஜெசிக்கா டான் (Jessica Tan)ஆகியோர் போட்டியிட்டனர். 

60.7 விழுக்காட்டு வாக்குகளுடன் மக்கள் செயல் கட்சி வென்றது.

திரு. ஹெங் முந்தைய தேர்தலில் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்டார்.

ஈஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றியதற்காகத் திரு. லிம்முக்குத் திரு. ஹெங் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். 

'ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குத் திட்டம் வைத்துள்ளோம். ' என்று திரு. ஹெங் தெரிவித்தார்.

தற்போது 5 உறுப்பினர் குழுத்தொகுதியாக ஈஸ்ட் கோஸ்ட் மாறியுள்ளது.

மக்கள் செயல் கட்சியின் அணியில் ஹெங் சுவீ கியெட்((Heng Swee Keat) , மாலிக்கி ஒஸ்மான்(Maliki Osman), டான் கியெட் ஹாவ்(Tan Kiat How), ஷெரில் சான் (Cheryl Chan), ஜெசிக்கா டான் (Jessica Tan) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாட்டாளிக் கட்சியின் சார்பில் நிக்கோல் சியா (Nicole Seah), டைலன் இங் (Dylan Ng), டெரன்ஸ் டான் (Terence Tan), அப்துல் ஷரிஃப் அபூ காசிம் (Abdul Shariff Aboo Kassim), கென்னத் ஃபூ (Kenneth Foo) ஆகியோர் களமிறங்குகின்றனர்

பாட்டாளிக் கட்சியின் நன்றியுரையில்
"கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் கடுமையாகச் செயலாற்றி வருகிறோம். உறுதியாக நிற்போம், தைரியமாக இருப்போம்"
என்று நிக்கோல் சியா கூறினார்.

121,000க்கும் அதிகமான வாக்காளர்களை இந்தக் குழுத்தொகுதி கொண்டுள்ளது.

சிங்கப்பூர்ப் பொதுத்தேர்தலில் கவனிக்கப்படும் குழுத்தொகுதிகளில் ஒன்றாக ஈஸ்ட் கோஸ்ட் விளங்குகிறது.

Top