Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் Raintree Cove மீண்டும் திறக்கப்பட்டது

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் Raintree Cove பகுதி மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் Raintree Cove மீண்டும் திறக்கப்பட்டது

படம்: National Parks Board

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் Raintree Cove பகுதி மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங் அப்பகுதியைத் திறந்துவைத்தார்.

பூங்காவின் C பகுதியில் உள்ள Raintree Cove, வருகையாளர்களுக்கு ஓர் அமைதியான சூழலைக் கொடுக்கும் அளவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Raintree Coveவில் இரண்டு வெளிப்புறத் திடல்களும், உடற்பயிற்சி செய்யத் தேவையான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்காவை வண்ணமிக்க பகுதியாக மாற்ற ''இயற்கை" என்ற கருப்பொருளில் இரண்டு இளையர் அமைப்புகளும், ஏழு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஓவியம் வரைந்து உதவியதாக தேசியப் பூங்காக் கழகம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்