Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குவளைகளைச் சுமந்து ஓடவிருக்கும் Eco Run பங்கேற்பாளர்கள் - காரணம் என்ன?

கழிவுகளைக் குறைப்பதற்காகக் கடந்த ஆண்டின் Eco Run ஓட்டத்தில் பங்கேற்ற 2,000க்கும் அதிகமானோர் பதக்கத்தையோ ஓட்டத்தை முடித்ததற்காகக் கொடுக்கப்படும் டி- சட்டைகளையோ பெறவில்லை.

வாசிப்புநேரம் -
குவளைகளைச் சுமந்து ஓடவிருக்கும் Eco Run பங்கேற்பாளர்கள் - காரணம் என்ன?

(படம்: TODAY)


கழிவுகளைக் குறைப்பதற்காகக் கடந்த ஆண்டின் Eco Run ஓட்டத்தில் பங்கேற்ற 2,000க்கும் அதிகமானோர் பதக்கத்தையோ ஓட்டத்தை முடித்ததற்காகக் கொடுக்கப்படும் டி- சட்டைகளையோ பெறவில்லை.

இவ்வாண்டு சுற்றுப்புறப் பாதுகாப்பிற்கான கடப்பாட்டின் மேலும் ஒரு படியாக பங்கேற்பாளர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர்க் குவளைகளைச் சுமந்தபடியே ஓடுவார்கள்.

கடந்த ஆண்டு Eco Run ஓட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு ஆங்காங்கே அமைக்கப்பட்ட தண்ணீர் மையங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குவளைகளின் மொத்த எண்ணிக்கை 45,000.

அந்த எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான Income.

அதன்படி “Zero Waste runners” எனப் பதிவு செய்யும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு குவளை கொடுக்கப்படும்.

அந்தக் குவளையை மடித்துச் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம்.

அல்லது இடைவாரில் மாட்டிக் கொள்ளலாம்.

பாதை முழுவதும் தண்ணீர் மையங்களில் அந்த ஒரு குவளையை மட்டுமே பயன்படுத்துவார்கள் பங்கேற்பாளர்கள்.

ஒவ்வொரு முறையும் தண்ணீர் மையத்தில் நின்று குவளையில் தண்ணீர் நிரப்புவதால் பங்கேற்பாளர்களுக்கு ஓட்டத்தை முடிக்கச் சற்றுக் கூடுதல் நேரம் ஆகலாம்.

இவ்வாண்டு மொத்தம் 5,300 பேர் நிகழ்ச்சிக்குப் பங்கேற்கப் பதிவு செய்துள்ளார்கள்.

அவர்களில் 1,600 பேர் “Zero Waste runners”ஆகப் பதிவு செய்துள்ளார்கள்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்