Images
  • handcuff - 1
    கோப்புப் படம்: TODAY

இணைய வர்த்தக மோசடி - சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது

இணைய வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அவருக்கு வயது 20.

இம்மாதம் 20ஆம் தேதி, Carousell வர்த்தகத் தளத்தில், இணைய வியாபாரி ஒருவர் பயன்படுத்தப்பட்ட Google Play அட்டையைத் தம்மிடம் விற்று ஏமாற்றிவிட்டதாகக் காவல்துறையிடம் ஏமாற்றப்பட்டவர் புகார் செய்திருந்தார்.

PayNow மூலம் பணம் செலுத்திய பின், வியாபாரியைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தம்மிடமிருந்து 100 வெள்ளி மோசடி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் கூறினார்.

விசாரணை மூலம், பிடோக் காவல்துறைப் பிரிவு சந்தேக நபரை அடையாளம் கண்டு, இன்று கைதுசெய்தது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

மோசடிக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். 

Top