Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஈர்ப்பதற்குக் காணொளி இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் பொருளியல் வளர்ச்சிக் கழகம்

பொருளியல் வளர்ச்சிக் கழகம், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஈர்ப்பதற்குக் காணொளி இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஈர்ப்பதற்குக் காணொளி இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் பொருளியல் வளர்ச்சிக் கழகம்

(படம்: Singapore Economic Development Board – EDB/Facebook)

பொருளியல் வளர்ச்சிக் கழகம், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை ஈர்ப்பதற்குக் காணொளி இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது.

எல்லைகள் மூடப்பட்டிருந்தாலும், சிங்கப்பூர் தொடர்ந்து உலகத்துடன் இணைந்திருக்கும் என்பதை அந்தக் காணொளி எடுத்துக்காட்டும்.

இணையத்தில் இடம்பெறும் காணொளி இயக்கம், பிரிட்டன், சீனா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பெரிய சந்தைகளைச் சென்றடையும்.

கொரோனா நோய்ப்பரவல் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்கள் காணொளியில் இடம்பெற்றுள்ளதாகக் கழகம் கூறியது.

அண்மையில், சிங்கப்பூரில் செய்யப்பட்ட சில முதலீடுகளும் அதில் விளக்கப்பட்டுள்ளன.

கிருமிப்பரவலைக் கடந்து இயங்க, சிங்கப்பூர் கொண்டிருக்கும் உறுதியையும் காணொளி பிரதிபலிக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்