மூத்தோருக்குச் சாலைப் பாதுகாப்பைச் சொல்லிக் கொடுக்கக் கூடுதல் முயற்சிகள்
மூத்தோரிடையே சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளைப் போக்குவரத்துக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மூத்தோரிடையே சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளைப் போக்குவரத்துக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
Lions Befrienders போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்வதும், கேளிக்கை விழாக்களுக்கு ஏற்பாடு செய்வதும் அவற்றுள் அடங்கும்.
மூத்தோர் வசதியாகச் சாலைகளைக் கடக்க வழிசெய்யும் Silver Zone எனப்படும் பகுதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்படுகிறது.
மூத்தோர் அதிகமாக வாழும் வட்டாரங்களில் அவர்களுக்குரிய சாலைப் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த அத்தகைய சிறப்புப் பகுதிகள் வகை செய்யும்.
2017 லிருந்து 2019ஆம் ஆண்டு வரை,சாலையைத் தாறுமாறாகக் கடக்க முயன்றபோது மரணம் விளைவித்த விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மூத்தோர் தொடர்புடையவை.
2023 ஆம் ஆண்டுக்குள் மூத்தோருக்கு ஏதுவான 50 Silver Zone பகுதிகளை அமைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதுபோன்ற 17 பகுதிகள் அமைக்கப்பட்டன.