Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காலமான மாணவருக்கு Edusave குணநலன் விருது - புற்றுநோயால் அவதியுற்ற போதும் PSLE தேர்வுக்கு அமர்ந்தார்

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களில் அலெக்ஸாண்ட்ரா (Alexandra) தொடக்கப்பள்ளியில் பயின்ற ரஃபேயல் லீயும் (Raphael Lee) ஒருவர்.

வாசிப்புநேரம் -

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்களில் அலெக்ஸாண்ட்ரா (Alexandra) தொடக்கப்பள்ளியில் பயின்ற ரஃபேயல் லீயும் (Raphael Lee) ஒருவர்.

பிறந்த 8 மாதத்தில் அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பள்ளியில் பயின்ற போது பலமுறை சிகிச்சைக்குச் சென்ற அந்த மாணவர் இம்மாதம் 13ஆம் தேதி அறுவைச் சிகிச்சையின்போது ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாகக் காலமானார்.

ஒவ்வொரு முறையும் குணமடைந்த பிறகு மீண்டும் மீண்டும் நோயின் பிடியில் சிக்கிய ரஃபேயல் அதைப் பொருட்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினார்.

நோயால் மீண்டும் அவதியுற்றிருந்தாலும் ரஃபேயல் இறுதியாண்டுத் தேர்வின் அனைத்துத் தாள்களுக்கும் அமர்ந்தார்.

ரஃபேயலின் மன வலிமையையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு Edusave குணநலன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேயலின் பெற்றோர் இன்று அந்த விருதையும் தேர்வு முடிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைசிறந்த குணநலன்களை வெளிப்படுத்தும் 2 விழுக்காட்டு மாணவர்களுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்படுகிறது.

தங்களுடன் ரஃபேயல் இல்லை என்றாலும் அவரது பண்புகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாய் அவரின் ஆசிரியர்கள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்