Images
  • edwin tong
    (படம்: Mediacorp)

அச்சுறுத்தல்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதன் சட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்: எட்வின் டோங்

அச்சுறுத்தல்களுக்கு எதிராக சிங்கப்பூர் அதன் சட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும் என்று சட்ட, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தலையீடு, தகவல் பிரசாரங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால் சிங்கப்பூர் பாதிப்படையாமல் இருக்க இது உதவும் என்று அவர் கூறினார்.

வெளிநாட்டுத் தரப்புகளைக் கையாள புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவோ ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுப்படுத்தவோ தேவை உள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய் கேட்டிருந்தார்.

பிரதமர் லீ சியென் லூங்கின் சார்பாகத் திரு டோங் அதற்குப் பதிலளித்தார்.

வெளிப்படையானதாகவும் ஜனநாயக நாடாகவும் உள்ள சிங்கப்பூர், மின்னிலக்க முறையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் அச்சுறுத்தல்களால் எளிதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இளம் நாடான சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தாக்கங்கள், இன, சமய ரீதியாகப் பாதிப்புகளை உண்டாக்கி, மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Top