Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கான கோழி, முட்டைகள் எங்கிருந்து வருகின்றன?

சிங்கப்பூரின் உணவுத் தேவையை, தொடர்ந்து பூர்த்திசெய்ய பல நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் உணவுத் தேவையை, தொடர்ந்து பூர்த்திசெய்ய பல நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

மலேசியா, அமெரிக்கா, பிரேஸில் போன்ற நாடுகளிலிருந்து சுமார் 180,000 டன் அளவுள்ள உயிருள்ள கோழிகளும், உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியும் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு 1.4 பில்லியன் கோழி முட்டைகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மிகக் குறைந்த அளவிலான முட்டைகள் மட்டும் நியூஸிலந்திலிருந்து தருவிக்கப்பட்டவை.

76 விழுக்காட்டு முட்டைகள் மலேசியாவிலிருந்தும் எஞ்சியவை சிங்கப்பூர்ப் பண்ணைகளிலிருந்தும் கிடைக்கின்றன.
90 விழுக்காட்டுக்கும் அதிகமான வாத்துகளை மலேசியாவிலிருந்து கொண்டுவருகிறது சிங்கப்பூர்.
பிரேஸில், அமெரிக்காவும் அவற்றின் வாத்துகளைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கின்றன.

முட்டை, கோழி போன்றவற்றை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது குறித்தும் ஆலோசித்துவருகிறது சிங்கப்பூர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்