Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களுக்காக 10 வாக்களிப்பு நிலையங்கள்

வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களுக்காகப் பத்து வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று அவர்கள் வாக்களிக்கலாம் என்று, தேர்தல் துறை தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களுக்காக 10 வாக்களிப்பு நிலையங்கள்

(படம்: AFP/Roslan Rahman)

வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்களுக்காகப் பத்து வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று அவர்கள் வாக்களிக்கலாம் என்று, தேர்தல் துறை தெரிவித்தது.

  • பெய்ச்சிங்
  • கேன்பரா
  • துபாய்
  • ஹாங்காங்
  • லண்டன்
  • நியூயார்க்
  • சான் ஃபிரான்சிஸ்கோ
  • ஷங்ஹாய்
  • தோக்கியோ
  • வாஷிங்டன்

ஆகிய இடங்களில், சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கே வாக்காளர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பான நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் தொடர்பில் வெளியுறவு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிவருவதாகத் தேர்தல்துறை கூறியது.

வெளிநாட்டில் வசிக்கும் பதிவுசெய்துகொண்ட வாக்காளர்களுக்கு, வாக்களிப்பு நடைமுறை தொடர்பான விவரங்கள் வேட்புமனுத் தாக்கல் தினத்திற்குப் பிறகு அனுப்பிவைக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பி, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றுவோர் வாக்களிப்பதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்