Images
  • a-1
    படங்கள்: Friend of TrafficWatch Zulkifli

யீஷூனில் விபத்து - முதியவர் மருத்துவமனையில்

யீஷூனில் இன்று (ஏப்ரல் 16) காலை நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருந்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


யீஷூன் அவென்யூ 9-இல் சம்பவம் நடந்தது. அது குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குக் காலை 11.30 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.


முதியவர் மின்-சைக்கிளில் சென்றுகொண்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. SBS பேருந்து எண் 811-இன் கீழ் மின்-சைக்கிள் சிக்கிக்கொண்டுள்ளதைப் படங்கள் காட்டுகின்றன.


Top