Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதுமை மறதி நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை அடையாளம் காணும் புதிய செயலி

முதுமை மறதி நோயின் ஆரம்பகால அறிகுறிகளை அடையாளம் காணும் செயலியை சிங்கப்பூரின் தேசிய நரம்பியல் நிலையமும் SingHealthஉம் அறிமுகம் செய்துள்ளன.

வாசிப்புநேரம் -
முதுமை மறதி நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை அடையாளம் காணும் புதிய செயலி

(படம்: Calvin Oh)

முதுமை மறதி நோயின் ஆரம்பகால அறிகுறிகளை அடையாளம் காணும் செயலியை சிங்கப்பூரின் தேசிய நரம்பியல் நிலையமும் SingHealthஉம் அறிமுகம் செய்துள்ளன.

உலக முதுமை மறதி தினத்தை ஒட்டி Memory Care செயலி அறிமும் செய்யப்பட்டது.

பயனீட்டாளர்கள், பெயர்களை அடிக்கடி மறக்கிறார்களா, பழக்கப்பட்ட வேலைகளைச் செய்ய சிரமப்படுகிறார்களா போன்ற கேள்விகளைச் செயலி கேட்கும்.

பயனீட்டாளர்களின் நினைவாற்றல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளது என்பது அதன் மூலம் சோதிக்கப்படுகிறது.

கேள்விகளின் முடிவுகள் செயலியில் சேகரிக்கப்படும்.

அவற்றின் மூலம் காலப்போக்கில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுள்ளன என்பதைப் பயனீட்டாளர்கள் காணலாம்.

முடிவுகளைக் கொண்டு செயலி ஆலோசனையையும் வழங்கும்.

Memory Care செயலியை, SingHealthஇன் Health Buddy செயலியிலிருந்து பெறலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்