Images
  • Elderly Motorcyclist (1)
    (படம்: CNA)

சாலை விபத்தில் 70 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

அங் மோ கியோவில் நேற்று (பிப்ரவரி 21) சாலை விபத்தில் 70 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.

அப்பர் தோம்சன் ரோட்டை நோக்கிச் செல்லும் அங் மோ கியோ அவென்யூ ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் SBS Transit பேருந்து, லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.

கவனக்குறைவான நடவடிக்கையால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக 46 வயது பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் குறித்து நேற்று காலை 6 மணியளவில் தகவல் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணையில் உதவ முன்வருமாறு, காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Top