Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வேலை கொடுங்கள், முதியோரைக் காப்பாற்றுங்கள்' : நிபுணர்கள்

மூத்தோரின் ஈடுபாடு தேவைப்படும் நடவடிக்கைகளை அவர்கள் அதிகம் விரும்புவர் என்றார் 30 ஆண்டு ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் கோ.

வாசிப்புநேரம் -
'வேலை கொடுங்கள், முதியோரைக் காப்பாற்றுங்கள்' : நிபுணர்கள்

(படம்: Francine Lim)

மனவுளைச்சலுக்கான அறிகுறிகளை அடையாளம் காண்பது, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருப்பதுபோலத் தெரியும் நபர்களை அடையாளம் காண்பது, கூடுதலான நிறுவனங்கள் மூத்த ஊழியர்களை வேலைக்கு எடுப்பது, எவரேனும் தற்கொலை குறித்துப் பேசினால் குடும்பமோ சமூகமோ அந்நபரைப் புறக்கணிக்காமல், உதவி வழங்குவது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, 60 வயதுக்கும் அதிகமானோரிடையே தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 129.

வயதானவர்கள்  உடலைப் பாதிக்கக்கூடிய நோயினாலும் மனத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்களாலும் தற்கொலை செய்யத் தூண்டப்படலாம் என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஹெலன் கோ கூறினார்.

வேலையின்மை, அன்புக்குரியவர்களின் இழப்பு போன்றவற்றையும் அவர் சுட்டினார்.

நிலைமையைச் சீர்படுத்த கூடுதல் முதியவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவது உதவும் என்று தாம் நம்புவதாக டாக்டர் கோ கூறினார்.

நிலையான வருமானம் அவர்களுக்குப் பொருளியல் சுதந்திர உணர்வை ஏற்படுத்தும்.எனினும் நிறுவனங்கள் மூத்த ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் தயங்குவதாகச் சொன்னார் டாக்டர் கோ.
தங்கள் ஈடுபாடு தேவைப்படும் நடவடிக்கைகளை முதியோர் அதிகம் விரும்புவர் என்றார் 30 ஆண்டு ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் கோ.

உதவி நாடும் வழிகள்:

தொலைபேசி எண்: 1800 221 4444

மின்னஞ்சல் : pat [at] sos.org.sg.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்